மட்டன் தேங்காய் வறுவல்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10294
தேய்காய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்
தேங்காய் சமஸ்திருத வார்த்தை. இந்த வார்த்தை ராமயணம், மகாபாரதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றில் காணப்படுகிறது. கி.மு மூன்றாம் நூண்டில் பாடலிபுத்திரா வாழ்ந்த மெகஸ்தனீஸ் இலங்கையில் காணப்பட்ட தென்னம் மரங்கள் குறித்து குறிப்புகள் எழுதி வைத்துள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து தான் தேங்காய் வட இந்தியாவுக்கு பரவியிருக்கிறது. ஏழாம் நூண்டில் யுவான் சுவாங், நாரிகேலா என்ற வார்த்தையை பயன்படுத்தி சீன மொழியில் தென்னை பற்றி குறிப்பி எழுதி வைத்துள்ளார். 13ம் நூற்றாண்டில் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இபினி பதூதா மனித தலை போன்று தோன்றுகிறது. அதன் மூன்று புள்ளிகள் மனிதனின் கண்கள், வாய் போன்று தோன்றுகின்றன. அதன் உட்புறம் உள்ள பருப்பு மனித மூளையை போன்று தெரிகிறது. அதன் நான் மனித தலைமுடியை போன்று உள்ளது என்று தேய்காயை வர்ணித்திருக்கிறார்.
மட்டன் தேங்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்
நல்லெண்ணை, தேங்காய், வேக வைத்த ஆட்டிறைச்சி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகுத்தூள், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி
செய்முறை
சூடான சட்டியில் முதலில் ஒருபிடி தேங்காய் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும். அதில் சோம்பு, கறிவேப்பிலை, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட தேங்காய் துண்டுகளை சேர்த்து எண்ணெயில் வேக வைக்க வேண்டும். பின்னர் இரண்டு கையளவு சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். காரத்திற்கு தேவையான அளவு பச்சைமிளகாயை சேர்க்கவும். அதேமாதிரி இஞ்சி, பூண்டுயை சேர்க்வும். தேவையாள அளவு உப்பு எல்லாதையும் சேர்த்து நன்றாக கலக்கிய பின் வேக வைக்கவும். அதனுள் வேக வைத்த ஆட்டிறைச்சியை சேர்க்கவும். மஞ்சள் துாள், மிளகுத்தூள், சிறிதளவு மிளக்காய் துாளை சேர்த்து நன்றாக கலக்கவும். பின் கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
தொடர்ந்து 5 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கினால் மிகவும் சுவையான மட்டன் தேங்காய் வறுவல் கிடைக்கும்.