Paristamil Navigation Paristamil advert login

காளான் வறுவல்

காளான் வறுவல்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10509


 தற்போது அனைத்து காலத்திலும் அனைத்து காய்கறிகளும் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று தான் காளான். காளானில் எண்ணற்ற நன்மைகளானது அடங்கியுள்ளது. எனவே இதனை அவ்வப்போது சமைத்து சாப்பிடுவது நல்லது. பெரும்பாலானோர் காளானை மசாலா அல்லது குழம்பு என்று தான் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் அதனை வறுவல் கூட செய்து சாப்பிடலாம்.

இங்கு காளானைக் கொண்டு எப்படி வறுவல் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
 
தேவையான பொருட்கள்:
 
காளான் - 1 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
 
செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வரமிளகாய் சேர்த்து 30 நொடி தாளிக்க வேண்டும்.
 
பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 
பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, காளானை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அப்போது காளானது தானாக தண்ணீரை வெளியேற்றும்.
 
அப்படி வெளியேற்றிய தண்ணீரானது முற்றிலும் வற்றி நன்கு வெந்த பின், அதில் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கினால், காளான் வறுவல் ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்