பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை! - நியாயப்படுத்திய ஜனாதிபதி மக்ரோன்!
19 ஐப்பசி 2023 வியாழன் 16:17 | பார்வைகள் : 4931
பிரான்சில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நியாயப்படுத்தியுள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தடை செய்துள்ளமை குறித்து அவர் தெரிவிக்கையில் அதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் ஒரு கண்ணியம் இருக்கவேண்டும் என குறிப்பிட்டார். ஐரோப்பாவில் இடம்பெற்ற அதுபோன்ற ஆர்ப்பட்டங்களில் தீவிர மதவாதம் மேலோங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய விரும்புவர்களும் உள்ளனர். ஆர்ப்பாட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு குரலாக இருக்கவேண்டும். ஆனால் இஸ்ரேலிய கொடிகளை எரித்து அமைதியைக் குலைக்கும் செயல்களும் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இன்று வியாழக்கிழமை மாணவர்களைச் சந்தித்த ஜனாதிபதி மக்ரோன், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.