Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு உதவ தயாராகும் சீனா!

இலங்கைக்கு உதவ தயாராகும் சீனா!

20 ஐப்பசி 2023 வெள்ளி 01:54 | பார்வைகள் : 3524


இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக உள்ளது என சீன நிதியமைச்சர் லியு குன் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதியமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்றைய தினம் பீஜிங்கில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போதே சீன நிதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சீனா நன்கு புரிந்துக் கொண்டுள்ளதாகவும் நெருக்கடியை சமாளிக்க இதுவரை இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் சீன நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் சீன நிதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பணப் பரிமாற்றம் தொடர்பில் நீண்டகாலமாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும், சீனாவுடன் நெருக்கமாகச் செயற்படும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் சீன நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சவாலான பணியில் இலங்கைக்கு சீனா வழங்கும் தொடர்ச்சியான ஆதரவை மிகவும் பாராட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் போட்டித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குமான வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்