முழுமையன பாதுகாப்பின் கீழ் பிரான்ஸ் பொதுப் போக்குவரத்து, அடையாள அட்டை அவசியம்.
17 ஐப்பசி 2023 செவ்வாய் 08:45 | பார்வைகள் : 4719
கடந்த வெள்ளிக்கிழமை Arras நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாடுமுழுவதும் உயர் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் Clément Beaune "சகல பொதுப் போக்குவரத்து கடுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது, கைவிடப்பட்ட பொருட்களுக்கு உடனடி நடவடிக்கை, அடிக்கடி காவல்துறையினர் ரோந்து, தேவைப்படும் போது சந்தேகத்தின் பெயரில் விசாரணைகள் என பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது " என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும், பயணிகள் தங்களை அடையாளப்படுத்த படத்துடன் கூடிய ஏதோவொரு ஆவணத்தை எடுத்துச் செல்லும்மடியும் கேட்டுள்ளார்.
பாரிஸ் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து ஆராய அமைச்சர் Clément Beaune d'Ile-de-France Mobilités (IDFM), தலைவி Valérie Pécresse அம்மையாரை இன்று மாலை சந்திக்கவுள்ளார்.