Champ-de-Mars : பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சுற்றுலாப்பயணி!

17 ஐப்பசி 2023 செவ்வாய் 14:20 | பார்வைகள் : 13618
வெளிநாட்டு சுற்றுலாபயணி ஒருவர் Champ-de-Mars பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை இரவு 11.30 மணி அளவில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றுள்ளனர். அங்கு இரு இளம் பெண்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், தரையில் இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
குறித்த பெண்கள் இருவரும் Jacques-Rueff சதுக்கத்தில் நின்றிருந்த போது அவர்களை நெருங்கிய சில நபர்கள், அவர்களை கத்தி முனையில் மடக்கிப் பிடித்து, அவர்களில் ஒருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இரு பெண்களும் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் எனவும், அண்மையில் அவர்கள் பிரான்சுக்கு சுற்றுலா வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2