பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்ஸ்! பெரும் படையணி களமிறக்கம்!!
17 ஐப்பசி 2023 செவ்வாய் 17:29 | பார்வைகள் : 5731
பெல்ஜியத்தின் தலைநகரத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரான்ஸ் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுக்கும் என, பிரதமர் எலிசபெத் போர்ன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
«பெல்ஜியத்தின் தாக்குதல், பிரான்சில் கடுமையான பயங்கரவாதத் தாக்குதல் அபாயத்தினை உறுதிப்படுத்தி உள்ளது»
«பிரான்சில் 10.000 காவற்துறையினரும், 7.000 இராணுவத்தினரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடித்து மக்களைக் காக்க களமிறக்கப்பட்டுள்ளனர்»
«அராஸ்,ஹமாஸ், இன்றைய புரூக்ஸெல்ஸ் தாக்குதல், பிரான்சில் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் என, அனைத்துப் பயங்கரவாதத்திற்கும் எதிராக தேசிய ஒருமைப்பாடு மிகவும் அவசியம் »
என பிரதமர் எலிசபெத் போர்ன் இன்று தெரிவித்துள்ளார்.