இல் து பிரான்சுக்குள் தீவிரமடைந்துள்ள டெங்கு - துரித நடவடிக்கை!
17 ஐப்பசி 2023 செவ்வாய் 17:30 | பார்வைகள் : 4408
இல் து பிரான்சுக்குள் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக மாகண சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி Limeil-Brévannes (Val-de-Marne) நகரில் முதலாவது டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்கு உள்ளான நபர் அண்மையில் வேறு இடங்களுக்கு பயணித்திருக்கவில்லை என தெவிக்கப்பட்ட நிலையில், டெங்கு நுளம்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
அதேவேளை, மேலும் பல இடங்களில் டெங்கு நுளம்பு பரவல் கண்டறியப்பட்டதாகவும் பிராந்திய சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
அதையடுத்து, பல்வேறு நகரங்களில் நுளம்புகளைக் கட்டுப்படுத்த நாசிணி தெளிக்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது. ஒக்டோபர் 15, 16 ஆகிய இரு தினங்களும் இந்த பணிகள் இடம்பெற்ற நிலையில், மீண்டும் ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளும் இப்பணி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.