இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுற்கு எதிராக திரண்ட மக்கள்
.jpeg)
21 ஐப்பசி 2023 சனி 08:02 | பார்வைகள் : 8987
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதன் போது இஸ்ரேல் மக்களிடம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 80 சதவீதம் பேர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக திரும்பியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 7 ம் திகதி முதல் கடும் மோதல் நடைபெற்று வருகின்றது.
அதன்படி கடந்த 7 ஆம் திகதி காசாவின் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொறுப்பு ஏற்க வேண்டும் என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க பெஞ்சமின் நெதன்யாகு தவறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி தற்போதைய பிரதமர் நெதன்யாகுவை விட முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி கான்ட்ஸ் சிறந்த பிரதமராக செயல்பட வாய்ப்புள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது பென்னி கான்ட்ஸ் சிறந்து பிரதமராக இருப்பார் என 48 சதவீதம் பேரும், நெதன்யாகு தான் சிறந்த பிரதமர் என 28 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1