Paristamil Navigation Paristamil advert login

உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசையில் இலங்கை விஞ்ஞானிகள்

உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசையில்  இலங்கை விஞ்ஞானிகள்

21 ஐப்பசி 2023 சனி 08:32 | பார்வைகள் : 7449


அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டோரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன், க லாநிதி ரி.மதனரஞ்சன் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

பணிநாள் மற்றும் வருடாந்த அடிப்படையில் விஞ்ஞானிகளைப் பல்வேறு காரணிகளைக் கொண்டு தர வரிசைப்படுத்தி இந்தப் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத்துறைகளில் இருந்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலில் இணைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்