பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் - முதன்முறையாக அனுமதி அளித்த பரிஸ் காவல்துறை!
21 ஐப்பசி 2023 சனி 16:06 | பார்வைகள் : 5921
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இடம்பெற உள்ள ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு பரிஸ் காவல்துறையினர் அனுமதியளித்துள்ளனர். முன்னதாக இடம்பெற இருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், முதன்முறையாக இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் Place de la République பகுதியில் இடம்பெற உள்ளது. இதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான எந்த ஒரு ஆர்ப்பாட்டத்துக்கும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
“பலத்த பாதுகாப்பு கண்காணிப்பு அமைக்கப்படும். சகித்துக்கொள்ள முடியாத எந்த செயற்பாடுகளும் பொறுத்துக்கொள்ள முடியாது!” என காவல்துறை தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, ஒக்டோபர் 12 ஆம் திகதி உள்துறை அமைச்சர் Gérald Darmanin “பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிப்பதாகவும், சட்ட ஒழுங்கினை பாதுகாக இந்த தடை விதிக்கப்படுகிறது!” என அறிவித்திருந்தார்.