Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு?

இலங்கையில் பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு?

22 ஐப்பசி 2023 ஞாயிறு 06:07 | பார்வைகள் : 3063


எரிபொருள், எரிவாயு அல்லது மின்சாரக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

(20)ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும், ஆனால் அதிக செலவினங்களால் தற்போது பேக்கரி தொழில் நலிவடைந்துள்ளதாகவும் அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

“இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எரிவாயு விலை அதிகரித்துள்ளது. எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. மின் கட்டணம் அதிகரித்துள்ளது.
மூன்றாவது முறையாக மின் கட்டணம் அதிகரித்துள்ளது. ஆனால் நாங்கள் எந்த அதிகரிப்பையும் செய்யவில்லை.

மின்சாரம் அதிகரிக்கப்பட்டாலும், அதிகரிப்பு எதுவும் செய்ய மாட்டோம் என தீர்மானித்தோம். ஆனால், அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கின்றோம். இனிமேல் எரிவாயு, டீசல், மின்கட்டணம் அதிகரித்தால் கண்டிப்பாக விலையை உயர்த்த வேண்டியிருக்கும்” என்று இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்