Paristamil Navigation Paristamil advert login

"carte vitale" அரச காப்புறுதி அட்டையை பயன்படுத்தி 71 000 யூரோக்கள் மோசடி.

22 ஐப்பசி 2023 ஞாயிறு 06:44 | பார்வைகள் : 6811


பிரான்சில் அரச காப்புறுதி அமைப்பான 'Sécurité sociale' பொதுமக்களுக்கு மருத்துவ காப்புறுதி வழங்குவதற்கு எற்படுத்தபட்ட ஒரு அரசாங்க அலகு.

இந்த 'Sécurité sociale' அமைப்பு வழங்கும் 'carte vitale' எனும் அட்டையை பயன்படுத்தி பல மோசடிகள் நடப்பது அண்மைக்காலமாக அவதானிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 1.7 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்யப்பட்டதாக CPAM தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் Drôme நகரில் Valence பகுதியில் உள்ள ஒரு பொது மருத்துவர், பல நூற்றுக்கணக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதாக ஆதாரங்களைக்காட்டி தன்னிடம் வரும் நோயாளர்களின் 'carte vitale' மூலம் சுமார் 71 000 யூரோக்கள் மோசடி செய்துள்ளதாக 'Sécurité sociale' சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மருத்துவர் மீது CPAM அமைப்பு Drôme நகரில் உள்ள அரச வழக்கறிஞர் அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கை ஏற்றுக்கொண்ட Valence நீதிமன்றம் மருத்துவரை வரும் டிசம்பர் மாதம் நீதிமன்றத்திற்கு ஆயராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்