கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
22 ஐப்பசி 2023 ஞாயிறு 09:01 | பார்வைகள் : 3396
கரீபியன் தீவுகளுக்கான பயணங்களை மேற்கொள்வதில் கவனமாக இருக்குமாறு கனேடிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதை மோசமான காலநிலை நிலவி வருகின்றது.
கரீபியன் தீவுகளுக்கு பயணங்கள் செய்வோர் மிகவும் அத்தியாவசியமான தேவையென தெரிந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ளுமாறும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கரீபியன் தீவுகளின் கிழக்கு பிராந்திய வலயத்தில் பலத்த புயல் காற்று தாக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புயல் காற்று தாக்கத்திற்கு டெமி என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், சில பகுதிகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மழை வீழ்ச்சி 72 முதல் 254 மில்லி மீட்டர் வரையில் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.