Paristamil Navigation Paristamil advert login

வேர்க்கடலை பக்கோடா

வேர்க்கடலை பக்கோடா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 13492


 நட்ஸ்களில் மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் வேர்க்கடலை. பொதுவாக வேர்க்கடலையை வறுத்து அப்படியே தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதில் சில மசாலாக்களை சேர்த்து பக்கோடா போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி.முக்கியமாக வேர்க்கடலை பக்கோடாவானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இங்கு வேர்க்கடலை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

 
தேவையான பொருட்கள்:
 
வேர்க்கடலை - 1 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
வரமிளகாய் - 5
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் வேர்க்கடலையை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
 
பின் பூண்டு மற்றும் வரமிளகாயை நீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 
பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
 
பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
 
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வேர்க்கடலை பக்கோடா ரெடி!!!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்