ஹமாஸ் அமைப்பின் 3 துணைத் தளபதிகள் பலி
25 ஐப்பசி 2023 புதன் 02:31 | பார்வைகள் : 4025
இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக தொடரந்து இடம் வருகிறது.
இதுவரை நடந்த போரில் மொத்தமாக 7000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் ஹமாஸ் அரசியல் துறை உறுப்பினர் காஜி ஹமாத் வழங்கிய தகவலின் அடிப்படையில், இஸ்ரேலிய படைகளை எதிர்த்து சண்டையிட சுமார் 35,000 ஹமாஸ் படை வீரர்கள் காசா பகுதியில் தற்போது இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸ் படையின் 3 துணைத் தளபதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றுப்படி, ஹமாஸ் அமைப்பின் அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ், மற்றும் கலீல் டெத்தாரி ஆகிய மூன்று துணைத் தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தின் விமானப்படை தாக்குதலில் இந்த 3 பேரும் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.