இலங்கையில் பெண்களுக்கு இரவுப் பணி: அமைச்சரவை அங்கீகாரம்
25 ஐப்பசி 2023 புதன் 06:37 | பார்வைகள் : 3232
இலங்கையில் பணிபுரிகின்ற பெண்களுக்கு இரவு வேளைகளில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிறுவனங்கள், அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து வழங்கும் நிறுவனங்கள், வியாபாரச் செயன்மறையை வெளியிலிருந்து நிறுவனங்கள் மற்றும் வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாகம் மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அலவலகங்களில் பணிபுரிகின்ற பெண்களுக்கே இவ்வாறு இரவு வேளைகளில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கான இயலுமை கிட்டும் வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள் முறைப்படுத்தல்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2023.08.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள் முறைப்படுத்தல்) சட்டமூலத்திற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.