Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : யூத குடும்பத்தினரின் வீடு எரிப்பு!

பரிஸ் : யூத குடும்பத்தினரின் வீடு எரிப்பு!

23 ஐப்பசி 2023 திங்கள் 07:33 | பார்வைகள் : 8697


பரிசில் வசிக்கும் யூத குடும்பத்தினரின் வீடு ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல்- காஸா மோதலின் விளைவாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் யூத குடும்பத்தினரின் வீட்டின் வாசலில் பெற்றோல் ஊற்றி வீடு எரிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 19, செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த எரிப்பு சம்பவத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் பெரிதளவில் இடம்பெறவில்லை என்றபோதும், அக்குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 

விசாரணைகளில், இந்த தாக்குதலை மேற்கொண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரே என தெரியவந்துள்ளது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு 20 ஆம் வட்டார நகர முதல்வர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்