அவதானம் குளிர்கால நோய்களும், மாத்திரைகளும். ANSM.
23 ஐப்பசி 2023 திங்கள் 07:32 | பார்வைகள் : 6546
குளிர்காலத்தில் அதிகம் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, மற்றும் தொண்டைக்குழி அழற்சி போன்ற நோய்களுக்கு, மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்தகங்களில் விற்கப்படும் மாத்திரைகளை பாவிப்பதில் மிகுந்த அவதானத்தோடு இருக்குமாறு 'ANSM: சுகாதாரப் பொருட்களின் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் நேற்றையதினம் அறிவித்துள்ளது.
குறித்த நோய்களுக்கு, மருத்துவரின் ஆலோசனை இன்றி சிறப்பாக வாய் வழியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது Actifed, Dolirhume, Nurofen, Humex போன்ற மாத்திரைகள் இரத்த நாளங்களின் அளவைக் குறைக்கும் விளைவைக் கொண்டிருக்கின்றன. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உண்டு என தேசிய மருத்துவ அமைப்பு கருதுவதால், அவற்ரைத் தவிர்க்குமாறு சுகாதாரப் பொருட்களின் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மாத்திரைகளை விளம்பரப் படுத்தாமல், அந்த மாத்திரைகளை வாங்குவதற்கு நாடிவரும் நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு தாம் மருந்தகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக ANSM தெரிவித்துள்ளது.
Actifed, Dolirhume, Nurofen, Humex போன்ற மாத்திரைகள் கடந்த 2022 ஆண்டு மூன்று மில்லியன் பெட்டிகள் பிரான்ஸ் முழுவதும் விற்பனையாகி உள்ளது. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.