மின்சார சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டிகள் 'vélos électriques' திருடுவது Île-de-France பிராந்தியத்தில் அதிகரிப்பு.

23 ஐப்பசி 2023 திங்கள் 07:33 | பார்வைகள் : 9856
வாடகைக்கு விடப்படும் மின்சார சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டிகள் 'vélos électriques' மற்றும் சொந்த பாவனையில் உள்ள மின்சார துவிச்சக்கர வண்டிகளும். அண்மைக் காலமாக Île-de-France பிராந்தியத்தில் திருடப்படுவது அதிகரித்துள்ளது.
வாடகை வண்டிகள் உங்களின் கணக்கிலோயே மிகநூதனமாக திருடப்பட்டு, அதனை அவதானிக்கும் GPS முறை அகற்றப்பட்டு கள்ளச் சந்தையில் மிக மலிவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் வாடகைக்கு எடுத்தவர் "அது தன் கணக்கில் திருடப்படுவது" என்பதை வாடகை நிறுவனத்திற்கு நிரூபிப்பது சங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது. மின்சார சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை 'vélos électriques வாங்கும் போது கடைகளில் அல்லது அறிந்தவர்கள் மூலம் வாங்குமாறும் கள்ளச் சந்தையில் வாங்க வேண்டாம் எனவும், வாடகைக்கு எடுக்கும் போதும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025