மதவாத குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுப்பனவுகள் இல்லை! - பிரதமர் உறுதி!

23 ஐப்பசி 2023 திங்கள் 15:43 | பார்வைகள் : 9440
மதவாத அல்லது அடிப்படைவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மோதல் பலமடைந்துள்ள நிலையில், பிரான்சில் வெடிகுண்டு அச்சுறுத்தல், யூத மதத்தினர் மீதான தாக்குதல்கள் என பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், இத்தகைய செயற்பாடுகளில் அடையாளம் காணப்படுபவர்களுக்கு வழங்கப்படும் சமூக கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என பிரதமர் Élisabeth Borne இன்று சபாநாயகர் முன்பாக தெரிவித்தார்.