விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! - பல மில்லியன் யூரோக்கள் இழப்பு!
27 ஐப்பசி 2023 வெள்ளி 17:14 | பார்வைகள் : 4674
அண்மையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்கள், பாடசாலைகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. வெளியேற்றங்களும், போக்குவரத்து தடைகளும் ஏற்பட்டிருந்தன.
குறிப்பாக கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதியில் இருந்து 22 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 70 வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விமான நிலையங்களுக்கு விடுக்கப்பட்டிருந்தன. இதனால் பல மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டிருந்ததாக பிரெஞ்சு விமான நிலையங்களுக்கான தொழிற்சங்கத்தலைவர் Thomas Juin இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை மட்டும் நாடு முழுவதிலும் உள்ள பத்து விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான போக்குவரத்துக்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.