பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்பட இஸ்ரேல் தனியாக இல்லை! - ஜனாதிபதி மக்ரோன்!
28 ஐப்பசி 2023 சனி 07:00 | பார்வைகள் : 4106
பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட, இஸ்ரேல் தனியாக இல்லை. பயங்கரவாதம் ஒரு சர்வதேச பிரச்சனை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார். ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 35 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது உள்நாட்டு மோதலோ, இஸ்ரேலின் தனிப்பட்ட பிரச்சனையோ இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. பயங்கரவாத அமைப்பு அனைத்து நாடுகளாலும் ஒடுக்கப்படும். இஸ்ரேல் தனியாக இல்லை!" என மக்ரோன் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 3,000 சிறுவர்கள் உள்ளிட்ட 7,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 35 பிரெஞ்சு மக்களும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.