ஆபத்தான எந்த ஒரு வெளிநாட்டவரையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுவோம்! - உள்துறை அமைச்சர்!!
28 ஐப்பசி 2023 சனி 08:00 | பார்வைகள் : 5501
நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த ஒரு வெளிநாட்டவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Arras நகரில் இடம்பெற்ற தாக்குதல் பல்வேறு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அமைதியான வாழ்க்கை வாழும் நபர்களை பறிகொடுப்பது சகித்துக்கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், ஒக்டோபர் 26 ஆம் திகதி அன்று நாட்டில் இருந்து 21 பேர் வெளியேற்றப்பட்டாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
20 தொடக்கம் 53 வயது வரையுள்ள 21 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த ஒரு வெளிநாட்டவரையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுவோம் எனவும் தெரிவித்தார். மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, கொள்ளை மற்றும் குடும்ப வன்முறையில் ஈடுபட்டுதல் போன்ற எந்த ஒரு குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார் .