Paristamil Navigation Paristamil advert login

காஸா பகுதி தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் முடக்கம்

காஸா பகுதி தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் முடக்கம்

28 ஐப்பசி 2023 சனி 08:41 | பார்வைகள் : 4674


காஸா பகுதி முழுவதும் இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் தாக்குதல்களின் கொடூரங்கள் வெளிவர வாய்ப்பில்லை என மனித உரிமைகள் ஆர்வலர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹமாஸின் ஆயுதத் தாக்குதலைத் தொடர்ந்து காஸா மீது குண்டுவீசத் தொடங்கிய சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்களில் குறைந்தது 7,326 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என காஸா பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதால், காஸாவில் உள்ள சுமார் 2.2 மில்லியன் மக்களின் நிலை தொடர்பில் எந்த தகவலும் வெளிவரப்போவதில்லை என மனித உரிமைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

காஸா பகுதியில் பணியாற்றிவரும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களின் சக ஊழியர்களிடம் தொடர்பு கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினர். 

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாமல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாத நிலை ஏற்படும் என்றே அஞ்சப்படுகிறது.

மேலும், காஸாவில் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய முக்கியமான தகவல்களையும் ஆதாரங்களையும் பெறுவது இன்னும் கடினமாக இருக்கும் என்பதே இந்த தகவல் தொடர்பு முடக்கத்தால் இஸ்ரேல் வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்