Paristamil Navigation Paristamil advert login

தக்காளி பஜ்ஜி

தக்காளி பஜ்ஜி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10456


 மாலையில் மழை பெய்யும் போது சூடாக சாப்பிட ஆசைப்படும் போது, அனைவருக்கும் நினைவில் வருவது பஜ்ஜி. பொதுவாக பஜ்ஜி என்றால் வெங்காய பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தக்காளியைக் கொண்டும் பஜ்ஜி செய்யலாம் என்பது தெரியுமா?

இங்கு தக்காளியைக் கொண்டு எப்படி பஜ்ஜி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
 
தேவையான பொருட்கள்:
 
தக்காளி - 2 (வட்டமாக நறுக்கியது)
கடலை மாவு - 3/4 கப்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
 
செய்முறை:
 
முதலில் ஒரு பௌலில் எண்ணெய் மற்றும் தக்காளியைத் தவிர, இதர அனைத்து பொருட்களையும் போட்டுக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
 
எண்ணெயானது சூடானதும், தக்காளி துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், தக்காளி பஜ்ஜி ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்