ஒருவரின் இறுதிச் சடங்கில் இன்று நிலத்தடி நீரும், சுவாசக் காற்றும் பாதிப்படைகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
30 ஐப்பசி 2023 திங்கள் 07:50 | பார்வைகள் : 5272
பிரான்சில் நடைபெறும் ஒருவரின் இறுதிச் சடங்கில் நிலத்தடி நீரும், சுவாசக் காற்றும் பாதிப்படைகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்; இறுதிச் சடங்குகளை நடத்தும் நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டவர்கள் பெரும்பாலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதையே தமது முறையாக கொண்டிருந்தனர், இன்று சவக்குழிகளின் விலை, கல்லறைகளின் விலை, போன்ற உடலை அடக்கம் செய்யும் தேவைகளின் விலைகள் அதிகரிப்பால், பெரும்பாலானோர் உடல்களை எரிப்பதற்கே விரும்புகின்றனர். ஒரு உடலை எரிக்கும் போது சுமார் 833 கிலோ CO2 காற்றில் கலந்து சுற்றுச்சூழலை மாசடையச் செய்கிறது. குறித்த CO2வின் அளவு ஒரு விமானம் Parisசில் இருந்து New York செல்லும் போது உமிழும் CO2 விற்க்கு சமமானது.
அத்தோடு இன்று சவப்பெட்டிகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்ற 'polyuréthane' என்னும் பிளாஸ்டிக் பதார்த்தமும், உடல் கெட்டுப்போகாமல் இறந்தவரின் உடலில் செலுத்தப்படும் Formel என்னும் பதார்த்தமும்; எரிக்கும் போது காற்றில் கலந்து, அந்த காற்றை சுவாசிப்போர்க்கு புற்றுநோயை ஏற்படுத்துவதோடு, அடக்கம் செய்யும் போது நிலத்தடி நீரில் கலந்து குடிநீரிலும் அதே பாதிப்பை ஏற்படுத்துகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இறுதிச் சடங்குகளை நடத்தும் நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் நீண்ட காலமாக நடத்திய ஆய்வுகளிலன் அடிப்படையில் முன்வைத்துள்ளதோடு, இறுதிச் சடங்குகளில் இயற்கையான பெருட்களை பயன்படுத்தும் படியும், பிளாஸ்டிக் பூக்கள் மற்றும் அலங்காரங்களை செயற்கையான, இயற்கைக்கு பாதகமான பதார்த்தங்களை பயன் படுத்துவதை தவிர்க்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.