Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஜனவரி முதல் VAT வரி உயர்வு

இலங்கையில் ஜனவரி முதல் VAT வரி உயர்வு

31 ஐப்பசி 2023 செவ்வாய் 09:33 | பார்வைகள் : 5673


2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெறுமதி சேர் வரியை 18% ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம், பெறுமதி சேர் வரி இன்னும் சேர்க்கப்படாத சில பொருட்கள், சேவைகளுக்கு மேற்படி வரியை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியானது 2002 ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்தது.

பெறுமதி சேர் வரியானது பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை பதிலீட்டம் செய்த்துடன் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்ச்சியின் மீதான வரியாகவும் காணப்படுகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்