விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

புதைக்கப்படாத சவப்பெட்டிகள் – 2000 வருட விநோத வழக்கம்

1 September, 2022, Thu 0:38   |  views: 5300

 பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பழக்குடி இனம் இறந்தவர்களைப் புதைக்காமல் அவர்களின் உடல்வைக்கப்பட்ட சவபெட்டியை மலைமுகடுகளில் தொங்கவிடும் நடைமுறையைப் பின்பற்றிவருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

 
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் சகடா பகுதியில் ராக்பேஸ், இகோரோட் எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். 
 
இவர்கள் கடந்த 2,000 ஆண்டுகளாக இறந்தவர்களைப் புதைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களின் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து, அவரின் உடலைச் சவப்பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். 
 
சவப்பெட்டியில் உள்ள உடல் அழுகாமல் இருக்க, மூலிகைகளால் நிறப்பப்படுகிறது. மேலும், சில மூலிகைகளின் புகையையும் காண்பித்து இறுக ஆணி அடித்து விடுகிறார்கள்.
 
அதன் பிறகு அந்தச் சவப்பெட்டியை அங்கு இருக்கும் ஒரு மலையின் உச்சிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்தவாறே இறந்தவரின் பெயரை மூன்று முறை சப்தமிட்டுக் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த சவபெட்டியை கயிற்றில் கட்டி அந்த மலையில் தொங்கவிடுகிறார்கள். 
 
இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் “இறந்தவர் உடலைப் பாதுகாக்கவே இப்படிச் செய்கிறோம். அவரின் உடல் இருந்தால்தான் அவர் சுவனம் செல்ல முடியும். மேலும், அவரின் பெயரை மூன்று முறை சப்தமிட்டுக் கூறினால்தான், இதற்கு முன் இறந்தவர்கள், புதிதாக இறந்தவரை வரவேற்க வசதியாக இருக்கும்.
 
இந்த வழக்கத்தை 2,000 வருடங்களாகத் தொடர்கிறோம். ஒருவேளை சவப்பெட்டியிலிருந்த உடல் அழுகிவிட்டதை அறிந்தால் அந்த சவப்பெட்டியில் மட்டும் மூலிகை ரசாயனத்தைச் சொட்டவிடுவோம். ஒரு முறை மூடிய சவபெட்டியில் மீண்டும் இரசாயனம் விடக் கூடாது. அது கடவுள் குற்றமாகிவிடும். ஆனாலும், இறந்தவர் சுவனம் செல்ல இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறோம். இந்தச் சூழல் எப்போதாவதுதான் ஏற்படும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.
 
பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தப் பழங்குடி மக்களின் சவப்பெட்டி இருக்கும் இடம் சுற்றுலாத்தலமாக பிரபலமாகிவிட்டது. அதனால், தொங்கும் சவப்பெட்டிகளை பார்க்க நிறைய சுற்றுலாப்பயணிகள் வருவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18