பெயரின் முதல் எழுத்தாக B எழுத்தைக் கொண்டவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் எனப் பார்க்கலாம்.
சூரியனின் கதிர்கள் இந்த எழுத்தின் மீது பட்டுச் சிதறுவதால் இவர்களின் உடலுக்குப் போதுமான உஷ்ணம் கிடைப்பதில்லை. ஆனால் அன்புடன் நடவடிக்கைகளைத் துவங்கும் இவர்களின் உள்மனதை ஆண்டவனால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.
பேச்சில் அன்பைப் பிசைந்து கொடுப்பதால் இவர்களைத் திரும்பத் திரும்பச் சந்திக்க வேண்டும் போலிருக்கும். மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.
வாயுவேகம், மனோவேகம் என்பார்களே… அது இவர்களுக்குத்தான் பொருந்தும். நொடியில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை பேச்சிலேயே சென்று வந்து விடுவர். கற்பனைக் கடலான இவர்கள் அடிக்கடி நீர் சம்பந்தமான சின்ன நோய்களால் அவதியுறுவர். இவர்கள் மனதைப் போலவே உடலும் குளிர்வானதாகவே இருக்கும்.
பெண் தெய்வத்தின் பேரில் அதிக நாட்டம் உண்டு. பின்னர் நடப்பவற்றை முன்பே கூறிவிடுவர். பல கலைகளை அறிந்தவர்கள். இதில் காதலும் ஒன்று. வெள்ளை ஆடைகளை விரும்பி அணிவர். குளிர்பானங்கள், புளிப்புச் சுவைகளை விரும்புவர்.
திட்டமிட்டு செயலாற்றுதல், நேர்மை, ஆன்மீகம், சமாதானம் ஆகியவற்றை இவ்வெழுத்துக்குறிக்கும். இந்த எழுத்து முதலெழுத்தாக வருவது நல்லது.
உடல் உழைப்பை விரும்பாத இவர்கள், அறிவுபூர்வமான விஷயங்களை எப்பொழுதும் அலசிக்கொண்டேயிருப்பர். மிக மென்மையாகப் பேசி யாரையும் தன்வசம் கொண்டு வந்து விடுவர். தண்ணீர் கலந்த உணவு நிரம்பப் பிடிக்கும். உஷ்ணமானவற்றை உதறித் தள்ளி விடுவர். செயலாற்றத் திட்டமிடுவர். ஆனால் செயல் புரிய சோம்பேறித்தனப்படுவர். இதனால் இவர்களின் பல வேலைகள் பாதியிலேயே நிற்கும். பெரும்பாலும் நிழல் இருக்கும் இடத்தில் மட்டுமே தன் கருத்தை வெளியிடுவர். பகல்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மாலையிலிருந்து சிந்தனைச் சிற்பிகளாகி விடுவர்.
அடக்கத்துடன் நடந்துகொள்ளும் இவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்கள். விண்வெளி போன்று பரந்த மனப்பாங்கு உடையவர்கள். எந்த ஒரு தீய செயலுக்கும் பழக்கப்படாமல் இருப்பதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால் இவர்களை வையகம் போற்றும். |