Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Name Numerology No Total
Laran
லரன்
312
Layan
லேயன்
211
Lenin
லெனின்
119
Lingam
லிங்கம்
817
Logan
லோகன்
119
Logesh
லோகேஸ்
826
Luxman
லக்ஷ்மன்
624
L யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?   - வாசிக்க

L இல் பெயர் துவங்கினால் `லக்கி’தான்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம் கொண்ட இவ்வெழுத்தில் சூரியக்கதிர்கள் பாய்ந்து பெயர் முழுக்கப் பரவுவதால் பரபரப்பும், சுறுசுறுப்பும், புத்திகூர்மையும், மனதில் பட்டதை தயங்காமல் கூறும் குணாதிசயமும் இவர்களை என்றும் அரங்கத்தில் முந்தியிருக்கச் செய்யும்.

கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும். உண்மைக்குப் பெயர் போன இவர் களால் உலகிற்கே பெருமை கிட்டும். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவர்கள் இவர்கள். இதனால் பலருடைய வருத்தத்தைச் சம்பளமாகப் பெறும் சங்கடங்களுக்கு உட்படுவர். இறைவன் மேல் கடும் பற்று உள்ள இவர்களுக்கு, மத நம்பிக்கையும் அதிகம். ஆனால் மூட நம்பிக்கைகளை அதிகம் வளர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
`புராணங்களையும், இதிகாசங்களையும், உபநிஷத்துக்களையும், சாஸ்திரங்களையும் மனிதர்கள்தானே இயற்றினர்! அதுபோல எனது கருத்துகளும் வருங்காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறும்’ என இவர்கள் ஆணித்தரமாக அடித்துக் கூறுவர். நாட்டுப்பற்று மிகுந்த இவர்கள் நல்ல உழைப்பாளியாகவும், நாணயம் மிகுந்தவராகவும், அடுத்தவர் சொல்லை மதிப்பவராகவும் இருப்பர்.
`திருட்டை ஒழிப்பது எப்படி’ எனக் காவல் துறையினரும், சட்ட வல்லுநர்களும்கூட இவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இவர்களது போதனைகளைக் கேட்பதற்கென்றே ஒரு கூட்டமுண்டு. இவர்களைக் கொண்டு பொதுக் காரியங்களை எளிதில் மக்களிடம் எடுத்துச் செல்லலாம். அந்தளவிற்கு மக்கள் இவர்களை நம்புவர்.

ஆச்சார, அனுஷ்டானங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பார்கள். பல உயர்பதவிகள் இவர்களை நாடி வந்து கொண்டேயிருக்கும். `நாம் இவரைப் போன்று வசதியாக இல்லையே, இந்தப் பதவி கிடைக்காமல் போய்விட்டதே’ எனப் பிறரைப் பார்த்துப் பேராசை கொள்ளமாட்டார்கள்.

ஆசிரியர்களைக் கடவுளாக மதிக்கும் இவர்கள் சுயகௌரவத்தை அதிகம் விரும்புவர். தன் யோசனைப்படிதான் காரியங்கள் நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பர். இதனால் நட்புக் கூட்டம் நகர்ந்துபோக வாய்ப்பு உண்டு. பேச்சாற்றலால் உலகையே வளைக்கும் திறமை உண்டு. அதர்மத்தின் எதிரியான இவர், அசாத்திய துணிச்சல் மிக்கவர். கல்வி, கேள்விகளில் தேர்ந்தவர். எதிலும் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு தனித்து நிற்பர். தர்ம காரியங் களில் எப்பொழுதும் தன் மனதை ஈடுபடுத்திக்கொள்வர். ஞாபகசக்தி அதிகம் கொண்ட இவர்கள், சிறந்த நடிகர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், போதனை செய்பவராகவும் திகழ்வர். நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை அலங்கரித்து ஆலோசனை வழங்குவர்.
கருணையும், நீதியும் இயற்கையாகவே கலந்து பெற்ற இவர்கள், கணக்கில் சூரர்களாக இருப்பர். அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை இவர்களால் தவிர்க்க இயலாது. எவ்விடத்திலிருந்தாலும் செல்வாக்குடன் திகழ்வர். பிறர் கஷ்டங்களை அறிந்து உதவுவர். இவர்களின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, பலர் இவர்களைப் பின்பற்றுவதில் பெருமை கொள்வர். யூகத்தின் அடிப்படையில் பொருளீட்டுவதில் வல்லவர். கல்வி நிறுவனம், ஆன்மீகப் பொருள் விற்பனை, திரைப்படத் துறை, மருத்துவத் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டால் செல்வம் கொழிக்கும்.
நினைத்ததைச் சாதிக்கும் இவர்களுக்கு அலர்ஜி ஏற்படலாம். மூளை மட்டும்தான் இவர்களுக்கு முதலீடு. யாரும் எளிதில் மடக்க இயலாத ராஜதந்திரம் படைத்த இவர்கள், 6ஆம் எண்ணினரிடமும் யு, வி, டபிள்யூ என்ற முன்னெழுத் தைப் பெயரில் கொண்டவர்களிடமும் மிகக் கவனமாக நடந்துகொள்வது நல்லது.

9, 1ஆம் எண்ணினரும், சி, ஜி, எல், எஸ் மற்றும் ஏ, ஐ, ஜே, கியூ ஆகியவற்றை முதல் எழுத்தாகப் பெற்றவர்களிடமும் தாராளமாக நட்புக் கொள்ளலாம். முன்னேற்றத்திற்கு மிக உதவிகரமாக இருப்பர். தியாக சீலர்களான இவர்களுக்கு மறுபிறவி இல்லை. உண்மையை, உண்மையாகக் கடைப்பிடித்தால் எதிலும் வெற்றிதான் `எல்’ எழுத்தைக் கொண்ட `லக்கி’ மனிதர்களுக்கு!

பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்