ஈரம்
10 மாசி 2024 சனி 10:47 | பார்வைகள் : 2166
முன்பு போல் இதுவும்!
விசா வாழ்விற்குள் நுழைய!
விடை பெறுவதற்கான கணம்!
ஈர முத்தங்கள்!
இரக்க முத்தங்கள்!
இனிப்புப் பதார்த்தங்கம் என!
எதிர் பார்ப்பின் பொதிகள்!
என்மேல் ஏற்றப் படுகின்றன!
வெளியே சிரித்தும்!
உள்ளே சலித்தும்!
கவலை தோய்ந்த!
கழுதை போல் நான்!
அவர்கள் என்னை!
வழியனுப்பும் வாஞ்சையுடன்!
மனசை அசைக்காமல்!
கையை அசைக்கிறார்கள்!
இப்போது அம்மாவின் நேரம்..!
அவளிடம் ஒன்றுமில்லை!
எனக்காய் தர!
உயிரை வைத்திருக்கிறாள்!
குரல் குழைய!
கண்ணீரில் மிதந்த படி!
கவனமாக போய் வா என்ற!
தாயிடம் தோற்றுத்தான் போகிறேன்!
ஒவ்வொரு முறையும்