Paristamil Navigation Paristamil advert login

சூரியனில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - படம்பிடித்த நாசா விண்கலம்

சூரியனில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - படம்பிடித்த நாசா விண்கலம்

24 மாசி 2024 சனி 07:57 | பார்வைகள் : 699


சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறலை நாசா விண்கலம் படம்பிடித்துள்ளது. 

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 'சோலார் டைனமிக்ஸ்' என்ற ஆய்வு விண்கலத்தை அனுப்பியது.

இந்த விண்கலமானது கடந்த 2010-ம் ஆண்டு முதல் சூரியனை ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில், சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறலை இந்த விண்கலம் தற்போது புகைப்படம் எடுத்துள்ளது.

இதுபோன்ற சூரியச் சிதறல்கள் தொலைத் தொடர்பு, மின்சேவைகளை பாதிக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்