Paristamil Navigation Paristamil advert login

17 பேரக்குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம்...

17 பேரக்குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம்...

11 சித்திரை 2024 வியாழன் 10:57 | பார்வைகள் : 344


முதியவர் ஒருவர் தனது 17 பேரக்குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது.

தற்போதைய காலத்தில் திருமணம் என்றால் ஆடம்பரமாகவும், பெரிய விழாவாகவும் பார்க்கப்படுகிறது. அதற்கான செலவும் தலையை சுற்றும் அளவுக்கு தான் உள்ளது. ஆனால், இங்கு முதியவர் ஒருவர் செலவை குறைப்பதற்காக தனது பேரக்குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்திய மாநிலமான ராஜஸ்தான் நோகா மண்டலத்தில் உள்ள லால் மதேஸர் கிராமத்தை சேர்ந்தவர் சுர்ஜராம் கோதாரா. இவர் கிராம தலைவராக இருக்கிறார்.

இவர் தனது குழந்தைகள், குடும்பம் என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். 

இவர்களுடைய குடும்பத்தில் உள்ள 17 பேரக்குழந்தைகளுக்கு திருமண வயதை எட்டியுள்ள நிலையில், தனித்தனியாக திருமணம் செய்து வைத்தால் செலவு அதிகமாகும் என்று நினைத்தனர்.

இதனால், 17 பேருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கான திருமண அழைப்பிதழையும் தயார் செய்து உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதில், முதல் நாளில் 5 பேரன்களுக்கும், மறுநாளில் 12 பேத்திகளுக்கும் திருமணம் நடந்தது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.       

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்