கனடாவில் வீடு வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்
12 சித்திரை 2024 வெள்ளி 07:25 | பார்வைகள் : 3549
கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு CIBC வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே தகுதி கிடையாது என கருதுவதாக 76 வீதமான கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இணைய வழியில் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
70 வீதமானவர்கள் வீட்டு விலை அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான பிரதான தடையாக சந்தையில் விலை அதிகரிப்பு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
குடும்பத்தினரிடமிருந்து அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றால் மட்டுமே தம்மால் வீடுகளுக்கு உரிமையாளராக முடியும் என கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 55 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளை கொள்வனவு செய்வது சாத்தியமற்ற விடயமாகவே இதுவரையில் வீடு கொள்வனவு செய்யாதவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.