ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு செல்வதை தவிர்க்கும்படி பிரான்ஸ் அறிவுத்தல்!
14 சித்திரை 2024 ஞாயிறு 09:50 | பார்வைகள் : 3299
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டுவருவதை அடுத்து, யுத்தம் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கும்படி பிரான்ஸ் அறிவுத்துள்ளது.
பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தகவலை நேற்று ஏப்ரல் 13 ஆம் திகதி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. ’ஈரான், லெபனான், பாலஸ்தீன நிலப்பரப்பு மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. நேற்றைய தினம் கிட்டத்தட்ட 300 ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
இந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.