Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக ரகசிய தகவல்கள் அடங்கிய கணணி திருட்டு!

ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக ரகசிய தகவல்கள் அடங்கிய கணணி திருட்டு!

16 சித்திரை 2024 செவ்வாய் 11:23 | பார்வைகள் : 2369


ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான ரகசிய தகவல்கள் அடங்கிய மடிக்கணணி ஒன்று திருடப்பட்டுள்ளது. Sceaux (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டுகளை செய்துவரும் நிறுவனங்களில் ஒன்றான Thalès எனும் நிறுவனத்தின் ஊழியரது மடிக்கணணியே திருடப்பட்டுள்ளது.  ஏப்ரல் 14 ஆம் திகதி நள்ளிரவு 2 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடிக்கணணியில் உள்ள ரகசிய தகவல்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்