Paristamil Navigation Paristamil advert login

சார்ஜ் செய்யும்போது மொபைல் சூடாவது ஏன்...?

சார்ஜ் செய்யும்போது மொபைல் சூடாவது ஏன்...?

17 சித்திரை 2024 புதன் 08:43 | பார்வைகள் : 373


செல்போனை சார்ஜ் செய்யும்போது சூடாவதற்கான காரணம் மற்றும் அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து இங்கு காண்போம்.

பொதுவாக செல்போன்கள் சார்ஜ் செய்யும்போது லேசாக சூடாவது இயல்பானது, ஆனால் போன் அதிகமாக சூடாக இருந்தால் அதில் பாரிய பிரச்சனை இருக்கும் அறிகுறியாக இருக்கலாம்.

அதேபோல் சில செல்போன்கள் சார்ஜ் போட்டவுடனே சூடாகும். 

நீங்கள் செல்போனில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போதோ அல்லது ஏதேனும் செயலியை பயன்படுத்தும்போதோ மொபைல் சூடானால், உங்கள் மொபைல் Multi Tasking செய்ய ஏற்ற மொபைல் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே ஒரே நேரத்தில் மொபைலை சூடாக்கும் விடயங்களை செய்ய வேண்டாம்.

உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்ய மூன்றாம் தரப்பு சார்ஜர் அல்லது கேபிளைப் பயன்படுத்தினால், உங்கள் செல்போனை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே அசல் சார்ஜர் (Charger) மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

செல்போனில் Storage அதிகமாக இருந்தால் கூட வெப்பமடைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் எப்போதும் அளவுக்கு அதிகமான Storageஐ மொபைலில் வைக்க வேண்டாம்.

அதேபோல் மொபைல் Charge ஆன பின்பும் தொடர்ச்சியாக சார்ஜரிலேயே வைத்துக் கொண்டிருப்பதும், செல்போன் சூடாவதற்கு ஒரு காரணமாக இருக்கும். இவையெல்லாம் அடிப்படை விடயங்கள் ஆகும்.

உங்களின் மொபைல் போன் Hack செய்யப்பட்டிருந்தால் கூட அளவுக்கு அதிகமாக சூடாக வாய்ப்பு இருக்கிறது. இணையம் பயன்படுத்தும்போதெல்லாம் உங்கள் மொபைல் சூடானால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இறுதியாக, உங்களது மொபைலை தொழில்நுட்ப உதவியைக் கொடுப்பவரை நாடி, சூடாகும் பிரச்சனை இருந்தால் சரி செய்துகொள்வது அவசியம். இல்லையெனில் செல்போன் வெடிக்கக் கூட வாய்ப்பு உள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்