Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சமையல் எரிவாயு விலை குறைப்பு!

இலங்கையில் சமையல் எரிவாயு விலை குறைப்பு!

1 சித்திரை 2024 திங்கள் 06:41 | பார்வைகள் : 6669


ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 05 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 23 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 772 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்