பரிஸ் : அகதிகளுக்கிடையே மோதல்! - ஆற்றில் விழுந்து ஒருவர் பலி!!
2 சித்திரை 2024 செவ்வாய் 21:00 | பார்வைகள் : 3835
ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இரு அகதிகளுக்கிடையிலான மோதலில், ஒருவர் ஆற்றில் விழுந்து பலியாகியுள்ளார்.
Saint-Martin கால்வாயில் அகதி விழுந்துள்ளார். பரிசின் கிழக்குப் பகுதியில் உள்ள Valmy quay அருகே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த அகதிகளில் இருவரே மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டையிட்டுள்ளனர்.
அதன் முடிவில் அவர்களில் ஒருவர் ஆற்றில் விழுந்துள்ளார்.தேடுதல் பணி இடம்பெற்ற போதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிலமணிநேரம் கழித்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் சக அகதிகளால் அடையாளம் காணப்பட்டது.
மோதலில் ஈடுபட்ட இருவரும் மாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது.