Paristamil Navigation Paristamil advert login

திருகோணமலை கூரிய ஆயுதங்களால் தாக்கி இளம் தந்தை கொலை

திருகோணமலை கூரிய ஆயுதங்களால் தாக்கி இளம் தந்தை கொலை

3 சித்திரை 2024 புதன் 10:17 | பார்வைகள் : 1320


திருகோணமலை , ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) பதிவாகியுள்ளது .

ஈச்சிலம்பற்று , இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா ராசா (வயது35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முன் பகையொன்றை  தீர்ப்பதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே இவ்வாறு 
 கூரிய ஆயுதங்களால் தாக்குதலை மேற்கொண்டு , கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது .

மேலும்  , சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும்  விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும்  ஈச்சிலம்பற்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்