Paristamil Navigation Paristamil advert login

சிசுவை விட்டுச்சென்ற 15 வயதான பாடசாலை மாணவி சிக்கினார்

சிசுவை விட்டுச்சென்ற 15 வயதான பாடசாலை மாணவி சிக்கினார்

15 வைகாசி 2024 புதன் 16:39 | பார்வைகள் : 1280


யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை  பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயாரும் மாணவிக்கு உதவியாக நின்றுள்ளார்.  மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையை  பிரசவித்த மாணவியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். 

விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய  மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்