Paristamil Navigation Paristamil advert login

Bobigny : ஆற்றில் மிதந்த இளைஞனின் சடலம் மீட்பு!

Bobigny : ஆற்றில் மிதந்த இளைஞனின் சடலம் மீட்பு!

20 வைகாசி 2024 திங்கள் 11:18 | பார்வைகள் : 5411


canal de l'Ourcq ஆற்றில் மிதந்த இளைஞனின் சடலம் ஒன்று காவ்லதுறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மே 16, வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Bobigny, (Seine-Saint-Denis) நகர் அருகே ஆற்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

Adam எனும் 19 வயதுடைய குறித்த இளைஞனது சடலமே அது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கடந்த 6 ஆம் திகதி திங்கட்கிழமை காணாமல் போயிருந்ததாக அவரது பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டு, தேடப்பட்டிருந்தார்.

அதேவேளை, காணாமல் போவதற்கு முதல் நாள் (மே 5 ஞாயிற்றுக்கிழமை) குறித்த இளைஞனை சில நபர்கள் அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்