Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பாவில் அதிகம் ஊதியம் வழங்கும் நாடு  பற்றிய விபரம்

ஐரோப்பாவில் அதிகம் ஊதியம் வழங்கும் நாடு  பற்றிய விபரம்

30 சித்திரை 2024 செவ்வாய் 09:48 | பார்வைகள் : 1479


ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்து பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடாக பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பாவிலேயே அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள் என்ற பட்டியலை பல அமைப்புகள் உருவாக்கியுள்ளன. 

அவ்வகையில், Eurostat தரவுகளின் அடிப்படையில், ஐரோப்பாவிலேயே, பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடு சுவிட்சர்லாந்துதான்.

சராசரியாக, சுவிட்சர்லாந்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம், (2022ஆம் ஆண்டு நிலவரப்படி), 106,839 யூரோக்கள், அல்லது 102,000 சுவிஸ் ஃப்ராங்குகள். இலங்கை மதிப்பில் 3,39,84,532.59 ரூபாய்.

ஐரோப்பாவிலேயே அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு, ஐஸ்லாந்து. இந்நாட்டில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம், 81,942 யூரோக்கள்.

பட்டியலில் மூன்றாவது இடம் லக்ஸம்பர்குக்கு. 

ஊதியம் 79,903 யூரோக்கள். நான்காவது இடம் நார்வேக்கு. ஊதியம் 74,506 யூரோக்கள். ஐந்தாவது இடம் பெல்ஜியத்துக்கு. ஊதியம், 70,297 யூரோக்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள பட்டியலில் பிரித்தானியாவுக்கு இடம் இல்லையென்றாலும், ஐரோப்பாவில் உள்ள நாடு என்னும் வகையில், அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவுக்கு பத்தாவது இடம் வழங்குகின்றன சில அமைப்புகள். 

பிரித்தானியாவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளைப் பொருத்து மாறுபடுகிறது 

வர்த்தக‌ விளம்பரங்கள்