Paristamil Navigation Paristamil advert login

சென் நதியில் நீந்த உள்ள பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ..!

சென் நதியில் நீந்த உள்ள பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ..!

19 ஆனி 2024 புதன் 18:03 | பார்வைகள் : 11737


பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ சென் நதியில் நீந்தபோவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், அதற்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15 ஆம் திகதி அவர் சென் நதியில் நீந்துவார் என இன்று ஜூன் 19 ஆம் திகதி தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிகளுக்காக சென் நதி சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. அங்கு நீச்சல் போட்டிகளுக்கான தடாகங்களை அமைக்கும் பணி இடம்பெற்று வருகிறது.

சென் நதியை தூய்மைப்படுத்துவது என்பது குதிரைக் கொம்பு போன்ற கடினமாக செயல். நீண்ட வருடங்களாக இந்த சத்தியத்தை ஆன் இதால்கோ தெரிவித்து வருகிறார். இறுதியாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக அது தயாராகி விடும் எனவும், அதில் நான் நீந்துவேன் எனவும் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், ஜூலை 15 ஆம் திகதி அவர் சென் நதியில் நீந்துவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்