2029ஆம் ஆண்டு ஏப்ரலில் பூமிக்கு வரபோகும் பேராபத்து... அச்சத்தில் விஞ்ஞானிகள்
31 ஆடி 2024 புதன் 09:24 | பார்வைகள் : 337
உலகம் அழியப்போகிறது என்று 2012-ல் பரவலாக பேசப்பட்டது. நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஆனால் விஞ்ஞானிகள் இப்போது ஒரு புதிய வகை அபோகாலிப்ஸ் பற்றி கவலைப்படுகின்றனர். இதை எதிர்கொள்ள நாசா விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
விண்வெளியில் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே சுற்றும் சிறுகோள்கள் சூரியனையும் சுற்றுவதால் அவ்வப்போது பூமிக்கு அருகில் வருகின்றன.
அதேபோல் 2029ல் ஒரு சிறுகோள் வரப்போகிறது. அதன் பெயர் அப்போஃபிஸ் (Apophis). இந்த சிறு கோள் 2004-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிறுகோள் 2029ல் பூமிக்கு அருகில் வரும், ஆனால் அது தரையில் படுவதில்லை. மேலும் மோதாமல் இருப்பதற்கான உத்தரவாதம் இல்லை.
2029 ஆண்டுக்கு பின்னர் 2036ல் பூமிக்கு அருகில் கடந்து செல்லும். அப்போது மோதும் அபாயம் இருப்பதாக முதலில் மதிப்பிடப்பட்டது. அதன் பிறகு மோதாமல் இருக்கலாம் என்கிறார்கள்.
இந்த சிறுகோள் பூமியை தாக்கினால் ஒரு நாட்டின் நிலப்பரப்பு முழுதும் அழிக்கப்படலாம்.
அதேபோல் கடலில் மோதினால் சுனாமி வர வாய்ப்புள்ளது. பூமியில் எங்கு விழுந்தாலும் காற்று மாசு அதிகரித்து மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
இந்த சிறுகோள் ஏப்ரல் 13, 2029 அன்று 32,000km தொலைவில் பூமிக்கு அருகில் கடந்து செல்லும். ஆனால் நமது செயற்கைக்கோள்கள் 20,000km உயரத்தில் சுற்றி வருகின்றன.
எனவே, அந்த சிறுகோள் பூமியைத் தாக்காவிட்டாலும், செயற்கைக்கோள்களைத் தாக்கி, அவை பூமியின் மீது விழும் அபாயம் உள்ளது.
350 மீட்டர் நீளம் கொண்ட இந்த சிறுகோள் ஒரு பெரிய கப்பல் போன்றது.
இந்த சிறுகோள் பூமியைத் தாக்கினால், அதை விண்வெளியில் வெடிக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை நாசா உருவாக்கி வருகிறது.
ஒரு சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தால், வளிமண்டல உராய்வு தானாகவே வெடிக்கும்போது, அந்தத் துண்டுகள் தரையில் எங்காவது விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே விஞ்ஞானிகள் தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.