சென் நதியை தூய்மைப்படுத்த செலவான பெரும் தொகை..!
1 ஆவணி 2024 வியாழன் 13:42 | பார்வைகள் : 4321
ஒலிம்பிக் போட்டிகளுக்காக சென் நதி தயார் செய்யப்பட்டு, அதில் நேற்று ஜூலை 31 ஆம் திகதி ட்ரைலதோன் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. சென் நதியை தூய்மைப்படுத்தும் பணிக்காக பெரும் தொகையான பணத்தை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மொத்தமாக €1.4 பில்லியன் யூரோக்கள் செலவில் சென் நதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் இணைந்து 15 வரையான பங்குதாரர்கள் இதில் முதலீடு செய்துள்ளனர். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதனை வரவேற்று நன்றியும் தெரிவித்துள்ளார்.
'சென் நதியை தூய்மைப்படுத்துவது என்பது நூற்றாண்டுகால கனவு. அதனை இந்த நான்காண்டுகளில் நாம் நனவாக்கியுள்ளோம். சென் நதி தற்போது நீந்துவதற்கு ஏற்றதாக உள்ளது!' என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.
சென் நதி 50 மீற்றர் விட்டமும், 30 மீற்றர் ஆழமும் கொண்டது. நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், அதன் தூய்மை பணிகளுக்கு பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.