ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் சிம்பு?

10 ஆடி 2024 புதன் 14:04 | பார்வைகள் : 7956
கடந்த ஆண்டில் மலையாளத்தில் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் வெளிவந்த '2018' திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. கேரளாவில் பெய்த பெரும் வெள்ளத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயுக்கி இருந்தார். இதையடுத்து இவர் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் படம் இயக்குவதாக அறிவித்தனர். மேலும், ஜூட் ஜோசப் ஆண்டனி அடுத்து விக்ரம், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து இப்போது நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் உடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.