மூன்று முத்திரைகள்! - மூன்று வர்ணங்கள்! - மூன்று வசதிகள்!
3 தை 2022 திங்கள் 10:30 | பார்வைகள் : 55845
இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பிரான்சில் பயன்பாட்டில் உள்ள முக்கிய மூன்று முத்திரைகள் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.
ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு முத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றது. பிரெஞ்சு தபாலகங்களூடாக 3 கிலோ எடைகொண்ட கடிதங்கள் வரை அனுப்ப முடியும். விநியோகிக்கப்படும் காலம் குறித்தே முத்திரைகளின் தேவையும் மாறுபடும்.
Verte : இது தான் அந்த பச்சை நிற முத்திரை. இது இரண்டாம் வகுப்பு முத்திரை. பிரான்சுக்குள் எந்த மூலையில் இருந்தாலும் இரண்டு நாட்களுக்குள் உங்கள் கடிதம் விநியோகமாகிவிடும்.
Prioritaire : இந்த முத்திரை அதன் பெயர் போன்றே ‘அவசர கடிதங்களுக்கு’ உரியது. இது சிவப்பு நிற முத்திரை. ஒரே நாளில் ‘டிங்’ என விநியோகமாகும் இந்த முத்திரை ஒட்டப்பட்ட கடிதங்கள்.
Ecopoli : இந்த முத்திரைகளுக்கு ஏன் இப்படி ஒரு பெயர் என்றால்…. எந்த வித அவசரமும் இல்லாமல்.. ஆடி அசைந்து யானை வருவது போல் மூன்றில் இருந்து ஐந்து நாட்களுக்குள் விநியோகமாகும் இந்த சாம்பல் நிற முத்திரை ஒட்டப்பட்ட கடிதங்கள். வங்கி கடிதங்கள், கட்டணங்களுக்குரிய கடிதங்களே பெரும்பாலும் இதில் அனுப்பப்படுகின்றன.
இந்த மூன்று முத்திரைகளுமே பிரதானமாக பிரான்சில் பயன்படுத்தப்படுகின்றது. இது தவிர இன்னும் பல முத்திரைகளும் உள்ளன. ஆனால் அவை மிக அரிதான பயன்பாடுகொண்டவை.
உங்களுக்குத் தெரியுமா… நீங்கள் அனுப்பும் கடிதத்தை ‘காப்புறுதி’ செய்யலாம்… தொலைந்துபோனால் 5,000 யூரோக்கள் வரை நஷ்ட்ட ஈடு கோரலாம். இது தொடர்பான தகவல்களை நாளை பார்க்கலாம்.