விஜய் உள்பட பிரபலங்களின் சம்பளம் எவ்வளவு?

4 புரட்டாசி 2024 புதன் 08:43 | பார்வைகள் : 4561
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் உட்பட மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் குறித்த தகவல் கசிந்து உள்ளது. இந்த தகவல் குறித்து தற்போது பார்ப்போம்.
‘கோட்’திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக ஏற்கனவே தயாரிப்பாளர் கூறியிருந்த நிலையில் தற்போது மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் என்றும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரபுதேவாவுக்கு 3 கோடி, பிரசாந்துக்கு 75 லட்சம், ஜெயராம் ஐம்பது லட்சம், அஜ்மல் 50 லட்சம், மோகன் 40 லட்சம், சினேகா 30 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் த்ரிஷா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, லைலா வைபவ் உள்ளிட்டவர்களும் பெரும் தொகை சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாரானாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த படத்தின் பட்ஜெட் வசூல் ஆகிவிடும் என்றும் இந்த படம் மொத்தம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.